ஏப்ரல் 6-ம் தேதி அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பாதுகாபு பணிக்காக மத்திய துணை இராணுவப் படை தமிழகம் வந்துள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 6 அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு என்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தொழிலாளர் துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.