அரசு ஊழியர்களுக்கான விடுப்பு சம்பளம் நிறுத்தம் - தமிழக அரசு அறிவிப்பு!
goverment
tamilnadu
employee
By Irumporai
அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் சம்பளத் தொகை ஓராண்டுக்கு நிறுத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசுக்கு நிதி பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் தொகை 2022 மார்ச் 31 வரை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் 15 நாள்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு சம்பளத் தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.