சென்னையில் அரசுப் பேருந்துகள் திடீர் நிறுத்தம் - பொதுமக்கள் கடும் அவதி..!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பேருந்து ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
போக்குவரத்து துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு
போக்குவரத்து துறையில் ஓட்டுநர்கள் 500 பேரை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வது குறித்து ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது.இதற்கு தொழிற்சங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த முடிவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோரிகை விடுத்திருந்தனர். இந்த நிலையில் ஒப்பந்த அடிப்படையில் 500 ஓட்டுநர்களை நியமித்து அவர்களுக்கு பயிற்சி வழங்கும் பணியில் போக்குவரத்து துறை ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
பேருந்துகள் திடீர் நிறுத்தம்
ஜுன் 1ஆம் தேதி முதல் அவர்களை பணி அமர்த்தம் செய்வதற்கான நடவடிக்கையில் போக்குவரத்து துறை ஈடுபட்டுள்ளதாக தொழிலார்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாம்பரம், சைதாப்பேட்டை, பிராட்வே, தி.நகர் , கே.கே.நகர், வடபழனி, ஆலந்துார் உள்ளிட்ட பணிமனைகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் மக்கள் கடுமு் அவதியடைந்தனர்.
சுமார் ஒரு மணி நேரமாக பேருந்து இயக்கப்படாததால் சென்னையில் பணி முடிந்து வீடு திரும்புவோர் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.இதையடுத்து தற்போது நிறுத்தப்பட்ட பேருந்துகள் இயக்க தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.