ரயில்வே பாலத்தில் தேங்கிய மழை நீரில் சிக்கிய அரசு பேருந்து - பயணிகளை மீட்ட தீயணைப்புத்துறை
வியாசர்பாடி ரயில்வே பாலத்தில் தேங்கிய மழை நீரில் சிக்கிய மாநகரப் பேருந்தில் இருந்த பயணிகளை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
மழை நீரில் சிக்கிய பேருந்து
சென்னையில் நேற்று இரவு முதல் கனமழையானது தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களிலும் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது.
தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற மாநகராட்சி சார்பில் 420 மோட்டர் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை பிராட்வேயில் இருந்து மணலி நோக்கி மாநகர அரசுப் பேருந்து 64C சென்று கொண்டிருந்தது.
அப்போது வியாசர்பாடி ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் தேங்கி இருந்த மழை நீரில் சிக்கியது. பேருந்தில் பயணிகள் பெரும்பாலனோர் இருந்த நிலையில் அவர்களை தீயணைப்புத்துறை வீரர்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.