பெண் பயணியை ஆபாச பேச்சுக்களால் தாக்க பாய்ந்த பேருந்து ஓட்டுநரால் பரபரப்பு
தென்காசியில் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவரை பேருந்து ஓட்டுநர் ஆபாச பேச்சுகளால் திட்டி தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடயம் - ஆலங்குளம் இடையே ஓடும் அரசுப் பேருந்தை ஓட்டுநர் முப்புடாதி முத்து என்பவர் கடந்த ஞாயிறு அன்று இயக்கியுள்ளார்.
அப்பொழுது குத்தபஞ்சான்விளக்கு பகுதியைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் பேருந்தில் ஏறிய நிலையில், தனது மகள் வந்துகொண்டிருக்கிறார் எனவே சில வினாடிகள் காத்திருக்கும்படி ஓட்டுனரிடம் கூறியுள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த பேருந்து ஓட்டுநர் முப்புடாதி முத்து அந்தப் பெண் பயணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் இது பெரும் வாக்குவாதமாகி, ஓட்டுநர் அந்தப் பெண் பயணியை ஒருமையிலும் ஆபாசமாகவும் பேசுகிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வளைதலங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் பேருந்தில் பயணியை தாக்க முயன்ற ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.