இன்று முதல் தியேட்டர்களுக்கு அனுமதி- புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு
புதுச்சேரியில் ஊரடங்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா 2வது அறையின் நீட்டிக்கப்பட்டு வரும் தளங்களுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. அதனால் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் இரவு 9 மணி வரை 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி, மதுபானக் கடைகளுடன் இருக்கும் பார்கள் 50% பேருடன் இயங்க அனுமதி, சுற்றுலா தலங்களில் 50% பேருக்கு அனுமதி, திரைப்படம், தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்பு நடத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.