கோவாவில் இனி கஞ்சா பயிரிடலாமா?
போதை பொருளான கஞ்சா செடியினை பயிரிட கோவாவில் அனுமதி வழங்கியுள்ளது, அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. போதை பொருளான கஞ்சா செடி நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ளது.
இந்நிலையில், கோவாவில் ஆளும் பாஜ அரசு, கஞ்சா செடி பயிரிடுவதை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு சட்ட ரீதியான ஒப்புதலை அம்மாநில சட்டத்துறை வழங்கி உள்ளது. இது குறித்து சட்ட துறை அமைச்சர் நிலேஷ் கேப்ரல் கூறும் போது, மருத்துவ பயன்பாட்டிற்காக மட்டுமே கஞ்சா பயிரிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் இது தொடர்பாக மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், கஞ்சா பயிரிடுவது தொடர்பாக இது வரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லைஎன கூறியுள்ளார்.
ஏற்கனவே கோவா மாநிலத்தில் போதைப் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில்,தற்போது கஞ்சா பயிரிட அனுமதிப்பது இளைய தலைமுறையினரை மிகவும் பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.