சமையல் எரிவாயு சிலிண்டர்கள் 4 ஆக குறைப்பு.., உஜ்வாலா பயனாளிகளுக்கு அதிர்ச்சி

LPG cylinder
By Yashini Jun 09, 2026 06:39 AM GMT
Report

உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ஆண்டுக்கு வழங்கப்படும் மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு 4 ஆக குறைத்துள்ளது.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு சுத்தமான சமையல் எரிபொருளை வழங்கும் நோக்கில் 2016ஆம் ஆண்டு பிரதமர் உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு வழங்கப்பட்டது.

ஆரம்பத்தில் ஆண்டுக்கு 12 மானிய சிலிண்டர்கள் வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு அது 9 ஆக குறைக்கப்பட்டது.

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் 4 ஆக குறைப்பு.., உஜ்வாலா பயனாளிகளுக்கு அதிர்ச்சி | Gov Cuts Lpg Cylinder To Ujjwala Beneficiaries

இந்நிலையில், தற்போது மேலும் குறைத்து 4 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்பட உள்ளன.

இந்த திட்டத்தின் கீழ், எரிவாயு சிலிண்டருக்கான மானியத் தொகை 200 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட இந்த ஒதுக்கீடானது, உஜ்வாலா திட்டப் பயனாளிகளின் சராசரி ஆண்டு நுகர்வுடன் ஒத்துப் போவதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் பிரவீன் மால் கனூஜா கூறினார்.

இதற்கிடையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையும் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 928.50 ரூபாயிலிருந்து ரூ.957.50 ரூபாயாக உயர்ந்துள்ளது.