கடும் நெருக்கடியில் இலங்கை : அதிபர் கோத்தபாய ராஜபக்சே அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை
இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் போராட்டம் காரணமாக ஆளும் ராஜபக்சே அரசுக்கு நெருக்கடி முற்றிவரும் நிலையில் அனைத்து கட்சி தலைவர்களுடன் அந்நாட்டு அதிபர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு பெறுப்பேற்று ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் பதவி விளக்க மறுத்து வரும் ராஜபக்சே சகோதரர்கள், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண முயற்சித்து வருகின்றனர். மறுபுறம் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துவரும் நிலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த பொது வேலை நிறுத்தத்தால் முக்கிய நகரங்கள் நேற்று சம்பித்தன.
தமிழ் மக்கள் அதிகம் வாழும் மலையகத்தில் இலங்கை தொழிலாளர்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ராஜபக்சேக்கள் தலைமையிலான அரசை கலைத்துவிட்டு அனைத்து காட்சிகளையும் கொண்ட இடைக்கால கூட்டணி அரசை நிறுவ எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனையே தேர்தல் ஆணையமும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்து கட்சி தலைவர்களுக்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சே அழைப்பு விடுத்தார். இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கபடலாம் என தெரிகிறது.
இலங்கையில் தற்போது ராஜபக்சே அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர், கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் அந்நாட்டு அதிபர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.