அடுத்த வாரம் இலங்கை திரும்புகிறார் கோட்டபய ராஜபக்சே? :அதிர்ச்சியில் பொதுமக்கள்
இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்சே அடுத்த வாரம் இலங்கை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தப்பியோடிய இலங்கை அதிபர்
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி நிலைக் காரணமாக வீதியில் பொது மக்கள் கடும் போராட்டங்களை நடத்தினர். ஆயிரக்கணக்கான மக்கள் இலங்கை அதிபர் மாளிகையினை முற்றுகையிட்டதால் அங்கிருந்துஅதிபர் கோட்டபய ராஜபக்சே கடந்த ஜூலை 14 ம் தேதி மாலத்தீவு வழியாக சிங்கப்பூர் தப்பி சென்றார்.

சிங்கப்பூரில் தங்கியிருந்த கோத்தபய அங்கிருந்து தாய்லாந்தில் நாட்டிற்கு தனது மனைவியுடன் தஞ்சமடைந்தார். இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் இலங்கை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் இலங்கை வரும் கோட்டபய
இது தொடர்பாக பேசியுள்ள இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதர் விரதுங்கா கூறுகையில் : என்னிடம் பேசிய கோட்டபய ராஜபக்சே அடுத்த வாரம் இலங்கை திரும்ப உள்ளதாக கூறினார்.பழையப்படி மீண்டும் அவர் நாட்டிற்கு சேவையாற்றுவார் எனக் கூறினார். இந்த தகவல் இலங்கை மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
ரணிலின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்! அரகலயவின் பின்னணியில் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து 6 பேர் விடுதலை IBC Tamil