சிங்கப்பூரிலிருந்து வெளியேறினார் கோட்டபய ராஜபக்ச - வெளியான பரபரப்பு தகவல்
சிங்கப்பூரிலிருந்து கோட்டபய ராஜபக்ச வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொருளாதார நெருக்கடி
இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஆட்சி சற்று மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிகரித்து வந்த விலைவாசி உயர்வை சற்று குறைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்நாட்டில் எரிபொருட்கள் தட்டுப்பாடுகள் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிபர் மாளிகை சூறையாடல்
கடந்த ஜூலை 9ம் தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டபய ராஜபக்சவின் அதிபர் மாளிகையில் பாதுகாப்பிற்காக இருந்த வீரர்கள் பணியிலிருந்து விலனர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை ஆவேசமாக உள்ளே புகுந்து அதிபர் மாளிகையை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். இதற்கு முன்பாக அதிபர் கோட்டபய ராஜபக்ச கப்பல் மூலம் தப்பி சென்றார்.

மாலத்தீவுக்குச் சென்ற கோட்டபய ராஜபக்ச
கோட்டபய ராஜபக்ச தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு கடந்த ஜூலை 13ம் தேதி ராணுவ விமானம் மூலம் தப்பி சென்றார். அதன்பின் கோட்டபய ராஜபக்ச, மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு சென்றடைந்தார்.
சிங்கப்பூரிலிருந்து வெளியேறினார்
இந்நிலையில், தற்போது கோட்டபய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து வெளியேறியுள்ளார்.
கோட்டபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட சமூக வருகை பதிவு காலாவதியானதால் வெளியேறியுள்ளதாக சிங்கப்பூர் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரிலிருந்து வெளியேறிய நிலையில் கோட்டபய ராஜபக்ச தாய்லாந்திற்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.