எங்களுக்கு ஜப்பான் உதவி கிடைக்கும் என நம்புறோம் : கோத்தபய ராஜபக்சே நம்பிக்கை

Gotabaya Rajapaksa
By Irumporai May 27, 2022 06:06 AM GMT
Report

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி தொடர்கிறது. அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எரிபொருட்கள் விலை உயர்ந்துள்ளது.

இதனால், அதிபர் கோத்தபய ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி, அதில் வன்முறை அரங்கேறிய நிலையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார் புதிய பிரதமராக ரணில் விக்ரம சிங்கே பதவி ஏற்றுள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளை சரி செய்வதற்கான கொள்கைகளை வகுக்காதவரையில் நிதி உதவி செய்ய வாய்ப்பு இல்லை என்று உலக வங்கி கூறி உள்ளது. இந்த நிலையில், ஆசியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில் 27-வது சர்வதேச மாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நடந்தது.

இதில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே காணொலிக்காட்சி வழியாக பேசியபோது:

இலங்கையின் முக்கிய வளர்ச்சி கூட்டாளிகளில் ஜப்பான் முக்கிய நட்பு நாட்டு இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளை போக்க தேவையான நிதி உதவியை ஜப்பான் வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இதற்கான பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.

எங்களுக்கு ஜப்பான் உதவி கிடைக்கும் என நம்புறோம் : கோத்தபய ராஜபக்சே நம்பிக்கை | Gotabaya Rajapaksa Japan Financial Assistance

கொரோனா காலத்தில் இலங்கையின் சுற்றுலா துறை முடங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாடு வாழ் இலங்கை மக்கள் உள்நாட்டுக்கு பணம் அனுப்புவது குறைந்து விட்டது.

வெளிநாட்டு கடன்கள் பண வீக்கம் மறுபுறம் என்று இலங்கை நெருக்கடியில் உள்ளது நெருக்கடிகளுக்கு தீர்வு காண உழைக்கிறோம். நாங்கள் சர்வதேச நட்பு நாடுகளிடம் உதவியை எதிர்பார்க்கிறோம்.

குறிப்பாக அத்தியாவசிய மருந்துகள், உணவு பொருட்கள், எரிபொருட்கள் தேவையை சமாளிக்க இந்த நீதி உதவி தேவைப்படும் எனக் கூறியுள்ளார்.