அமெரிக்க கிரீன் கார்டுக்கு கோட்டபய ராஜபக்சே விண்ணப்பம் ?

Gotabaya Rajapaksa Sri Lankan political crisis
By Irumporai Aug 19, 2022 04:27 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

அமெரிக்க கிரீன் கார்டுக்கு கோட்டபய ராஜபக்சே விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோட்டபய ராஜபக்சே

இலங்கையில் ஏற்பட்டுள்ள வராலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் அதிபர் கோட்டபய ராஜபக்சே மாளிகையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் குதித்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள வராலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் அதிபர் கோட்டபய ராஜபக்சே மாளிகையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் குதித்தனர்.

அமெரிக்க கிரீன் கார்டுக்கு கோட்டபய ராஜபக்சே  விண்ணப்பம் ? | Gotabaya Rajapaksa Application For Us Green Card

இந்த நிலையில் கடந்த மாதம் ஜூலை -13 ம் தேதி மாலதீவில் தஞ்சமடைந்து அங்கிருந்து சிங்கப்பூருக்கு தப்பி சென்று தனது அதிபர் பதவியினை ராஜினாமா செய்தார்.

கிரீன் கார்டு கோரி விண்ணப்பம்

இந்த நிலையில் கோட்டபய ராஜபக்சே விரைவில் இலங்கை திரும்புவார் என தகவல் வெளியான நிலையில் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற கோட்டபய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக அவரது மனைவிக்கு தனக்கும் அமெரிக்க அரசிடம் கிரீன் கார்டு கோரி விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.