இனிப்பை உணவுக்கு முன் அல்லது பின் சாப்பிட வேண்டுமா?
இனிப்பு சாப்பிடுவது என்பது பலரும் அலாதியான இன்பத்தை அளிக்கக்கூடியது. குறிப்பாக நீரிழிவு குறைபாடு வந்தாலும் கூட, இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தை கட்டுப்படுத்துவது கடினம் என்றால் மனிதர்களுடன் இனிப்பு எவ்வாறு கலந்துள்ளது என பாருங்கள் . உணவுடன் இனிப்பு எடுத்துக் கொண்டால் மட்டுமே இந்த உணவு மனப்பூர்வமானதாக முழுமையானதாக இருக்கும் என்பது அனைவரது நம்பிக்கையாகவும் உள்ளது.
இனிப்பு சாப்பிடுகையில் மூளையில் சுரக்கும் டோபமைன் என்னும் வேதிப் பொருளானது நமது மகிழ்ச்சி உணர்வை தூண்டுகிறது என்பதால் நாம் என்றுமே இனிப்புக்கு அடிமை தான்.. ஆனால் உணவுக்குப் பிறகு இனிப்பு சாப்பிடும் பழக்கத்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காரணம், சாப்பிட்ட பிறகு இனிப்பு எடுத்துக் கொள்வது நமது உடல் நலனை பெரிய அளவில் பாதிக்கலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிக இனிப்பை எடுத்துக் கொள்ளும்போது உடல் பருமன், அதிக ரத்த உராய்வு, எரிச்சல் மற்றும் இதய நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் உணவுக்கு பிறகு இனிப்பு சாப்பிடுவதைக் காட்டிலும், உணவுக்கு முன்பாக இனிப்பு சாப்பிடுவது நல்லது. உடலில் செரிமாணத்திற்கு தேவையான என்சைம்களை அது தூண்டி விட்டு நாம் சாப்பிடும் உணவு எளிதாக செரிமானம் அடைகிறது.
அதேசமயம் உணவுக்கு முன்பாக இனிப்பு சாப்பிட்டால் நாவில் சுவையை உணரும் சுரப்பிகளை அது தூண்டுகிறது. இதனால் சாப்பிடும் உணவை ரசித்து, ருசித்து சாப்பிட இயலும்.உணவுக்கு இறுதியில் இனிப்பை எடுத்துக் கொண்டால் வாயுத் தொல்லை, ஆசிட் ரிஃப்ளெக்ஸ் போன்ற பிரச்சனைகளை ஏற்படும்.