விஜய்யின் கட்சிக்கொடியில் இடம்பெறும் அந்த மலர்..சின்னம் பற்றி வெளியான புதிய தகவல்!

Vijay Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Swetha Aug 17, 2024 03:24 AM GMT
Report

தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கொடியில் இடம்பெற்றுள்ள சின்னம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கட்சிக்கொடி

நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். 2026 சட்டசபை தேர்தல்தான் இலக்கு என்று தீர்கமாகவே கூறி உள்ளார். இதற்கிடையே கட்சியின் ஆலோசனைக் கூட்டம் விஜய் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவ்வப்போது நடைபெற்று வந்தது.

விஜய்யின் கட்சிக்கொடியில் இடம்பெறும் அந்த மலர்..சின்னம் பற்றி வெளியான புதிய தகவல்! | Got New Info About Tvk Partys Flag And Symbol

கட்சி தொடங்கிய பின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 22-ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. மாநாடு நடத்துவதற்காக ஆயத்த பணிகளில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு? திருச்சி இல்லையாம்..வெளியான புதிய தகவல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு? திருச்சி இல்லையாம்..வெளியான புதிய தகவல்!

அந்த மலர்..

2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு தமிழக அரசியலையே திரும்பி பார்க்க வைக்கும் வண்ணம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

விஜய்யின் கட்சிக்கொடியில் இடம்பெறும் அந்த மலர்..சின்னம் பற்றி வெளியான புதிய தகவல்! | Got New Info About Tvk Partys Flag And Symbol

இந்த நிலையில், த.வெ.க. கட்சிக்கொடியின் இரு வண்ணங்களுக்கு மத்தியில் வாகை மலர் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வாகை என்றால் வெற்றி என்ற அடிப்படையில் த.வெ.க. கட்சிக்கொடியில் வாகை மலர் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் விஜய் என்றால் வெற்றி என்ற அடிப்படையிலும் வாகை மலர் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பண்டைய காலங்களில் போரில் வென்ற மன்னர்களுக்கு வாகை மலர் சூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.