ஒருவர் அணிந்திருந்த மேல்சட்டையை கழற்றி தனக்கு போட்டு அழகு பார்த்த கொரில்லா குரங்கு...!

Viral Video
By Nandhini Dec 14, 2022 07:47 AM GMT
Report

ஒருவர் அணிந்திருந்த மேல்சட்டையை கழற்றி கொரில்லா குரங்கு தனக்கு போட்டு அழகு பார்த்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

மேல்சட்டையை போட்டு அழகு பார்த்த கொரில்லா குரங்கு

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், கொரில்லா குரங்கு ஒன்று தன்னை செல்போனில் புகைப்படம் எடுத்த நபரிடம்  வந்து, அவர் அணிந்து மேல் சட்டையை கையை வைத்து கழற்றுகிறது. அந்த ஆடையை கழற்றி எடுத்து சென்று குரங்கு போட்டுக்கொள்கிறது.

போட்டுக்கொண்டவுடன் அந்த மேல்சட்டை தனக்கு நன்றாக இருக்கிறா என்று கேட்பது போல் முகபாவணை செய்கிறது. அந்த மேல்சட்டையை உற்று உற்று பார்த்து, தொட்டுக்கொண்டிருக்கிறது.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே வியப்படைந்து, நண்பரே... அந்த சட்டை உங்களுக்கு ரொம்ப அழகாகவே இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

gorilla-monkey-viral-video