உயிரை காப்பாற்றியதே தமிழிசை தான்; எடுத்த அந்த ரிஸ்க் - கோபிநாத் உருக்கம்!
தமிழிசை சௌந்தர்ராஜன் குறித்து கோபிநாத் உருக்கமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழிசை சௌந்தர்ராஜன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கோபிநாத். அண்மையில் அவருக்கு தனியார் சேனல் ஒன்று பாராட்டு விழா நடத்தியது.
அதில் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் சினிமா பிரபலங்கள் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தமிழிசை, ”கோபிநாத் என்னுடைய தம்பி அவரிடம் பேசும்போது நான் பலமுறை வியந்து பார்த்திருக்கிறேன். அந்த அளவிற்கு கேள்வி ஞானமும் அதோடு பல விஷயமும் தெரிந்து வைத்திருக்கிறார்” என்று பெருமையாக பேசினார்.
கோபிநாத் உருக்கம்
இதனைதொடர்ந்து, பேசிய கோபிநாத் தமிழிசையை குறித்து தகவல் ஒன்றை பகிர்ந்தார். அதாவது அவருக்கு தெரிந்த ஒரு குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி இருக்கிறது. செய்வதறியாமல் இருந்த அவர் உடனே தமிழிசைக்கு போன் செய்திருக்கிறார். அந்நேரம் டெல்லியில் மீட்டிங்கில் இருந்த அவர் கோபிநாத் சொன்னதை கேட்டு ஃப்ளைட்டை பிடித்து இங்கே வந்துவிட்டார்.
அந்த குழந்தைக்கு உரிய மருத்துவத்தை டாக்டர்களோடு சேர்ந்து செய்து யாராலும் காப்பாற்ற முடியாத அந்த குழந்தையை காப்பாற்றியுள்ளார். அவருடைய பிசியான லைஃபில் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவர் எடுத்த ரிஸ்க் அன்றைக்கு நான் அவர் கூடவே இருந்து பார்த்த எனக்கு தான் தெரியும்.
சிறந்த பெண்ணாகவும் ஆளுமை மிக்க ஒரு பெண்ணாகவும் இருக்கும் தமிழிசை அக்காவின் தம்பி நான் என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறேன்” என்று மிகவும் நெகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டார்.