ஓடும் ரயிலில் உள்ளாடையுடன் உலாவிய எம்.எல்.ஏ
ஓடும் ரயிலில் பீகார் மாநில சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளாடையுடன் பயணித்தது சர்ச்சையாகியுள்ளது. பீகார் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்தவர் எம்.எல்.ஏ கோபால் மண்டல் இந்த நிலையில் கடந்தவியாழன் அன்று ஓடும் ரயிலில் வெறும் உள்ளாடையுடன் ரயிலுக்குள் உலாவியதாக இணையத்தில் புகைப்படம் வெளியானது.
இந்த சம்பவம் நடந்த போது ரயிலில் பயணித்த போலீசார் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் தலையிட்டு சமாதானம் செய்துள்ளனர். அதாவது பாட்னாவில் இருந்து எம்.எல்.ஏ கோபால் புது டெல்லிக்கு தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ஏசி கம்பார்ட்மெண்டில் அவர் பயணித்துள்ளார்.
அப்போதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள எம்.எல்.ஏ கோபால் மண்டல் : நான் பயணத்தின்போது வெறும் உள்ளாடை மட்டும் அணிந்திருந்தது உண்மை தான் ரயிலில் ஏறியதும் எனக்கு வயிற்று உபாதை ஏற்பட்டது.
அதனால் மேல் ஆடைகளை துறந்தேன். நான் பொய் ஒன்றும் சொல்லவில்லை என கூறும் கோபல் மண்டல் கழிவறைக்கு செல்லும் வழியில் பயணி ஒருவர் என்னை தடுத்தார். அவசரம் காரணமாக அவரது தடையை தகர்த்தேன்.
#WATCH I was only wearing the undergarments as my stomach was upset during the journey: Gopal Mandal, JDU MLA, who was seen in undergarments while travelling from Patna to New Delhi on Tejas Rajdhani Express train yesterday pic.twitter.com/VBOKMtkNTq
— ANI (@ANI) September 3, 2021
பின் நான் மீண்டும் எனது இருக்கையை நோக்கி வந்தபோது அவர் கேள்வி எழுப்பினார். மேலும் அப்போது பெண் பயணிகளே இல்லாத இடத்தில் எப்படி பெண்களுக்கு அசௌகரியமாக இருக்கும் என கூறியுள்ள அவர் எனக்கு 60 வயதாகிறது எனவிளக்கம் கொடுத்துள்ளார்.இந்த சம்பவம் பீகார் அரசியல் சர்ச்சையை எழுப்பியுள்ளது.