கோபாலபுரத்தில்… தந்தை படத்திற்கு மரியாதை செலுத்திய மு.க.அழகிரி!
alagiri
gopalapuram
respect
kalaingar bdy
By Anupriyamkumaresan
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 நலத்திட்ட உதவிகளை இன்று தொடக்கி வைத்தார். மேலும் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். இவ்வாறு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கருணாநிதியின் மூத்த மகனான மு.க.அழகிரி சென்னை கோபாலபுரம் சென்று, அங்கு வைக்கப்பட்டிருக்கும் தனது தந்தை திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் தொடர்ச்சியாக தனது தாயாரிடமும் மு.க.அழகிரி, ஆசி பெற்றுள்ளார்.