கூகுளிலும் இனிமேல் சமஸ்கிருதம் உண்டு : சுந்தர் பிச்சை அறிவிப்பு

Google
By Irumporai May 12, 2022 05:28 AM GMT
Report

இனி கூகுள் Translate-ல் சமஸ்கிருதமும் இடம் பெறும் என கூகுளின் தலமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

உலகில் உள்ள 300 மில்லியனுக்கு அதிமான மக்கள் பேசும் 133 மொழிகளை மொழி பெயர்த்து கொடுக்கிறது Google Translate, இன்றைய ஸ்மார்ட் யுகத்தில் யாருடைய துணையும் இல்லாமல் வேற்று மொழியினை நமது சொந்த மொழியில் தெரிந்து கொள்ள Google Translate மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.

குறிப்பாக Google-ன் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை பொறுப்பேற்றதும் Google அசுர வளர்ச்சி பெற்றுவிட்டது என்றுதான் கூற வேண்டும் , பல்வேறு தகவல்களை சமானிய மக்களுக்கும் பயன்படுத்தும் வகையில் google - ஐ கொண்டு சேர்த்ததில் முக்கிய பங்கு தமிழகத்தை பூர்விகமாக கொண்ட சுந்தர்பிச்சைக்கு உண்டு என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் புதிய அறிவிப்புகளை Google வெளியிடும் அந்த வகையில் தற்போது சுந்தர் பிச்சை வெளியிட்ட அறிவிப்பின் படி :

300 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பேசும் 133 மொழிகளில் கருவியின் கவரேஜை எடுத்துச் செல்லும் 24 புதிய மொழிகளை Google Translate ஆதரிக்கிறது .

தற்போதுGoogle Translate அமெரிக்கர்களின் முதல் பூர்வீக மொழியினையும்புதிதாக இந்தியாவின் பழமையான மொழிகளில் ஒன்றான அஸ்ஸாமி, போஜ்புரி, கொங்கனி, டோக்ரி, சமஸ்கிருதம் போன்றவை அடங்கும் என கூறிய சுந்தர் பிச்சை இதன் மூலம் 30 கோடின் மக்கள் பயன் பெறுவார்கள் என்றும், இது மொழிபெயர்ப்பிற்கான திருப்புமுனை என  கூறியுள்ளார்.