இனி போன் திருடப்பட்டாலும் பிரச்சினை இல்லை - கூகிள் அறிமுகப்படுத்தும் AI பாதுகாப்பு
போன் திருடர்களிடமிருந்து ஆண்ட்ராய்டு மொபைல்களைப் பாதுகாக்க கூகுள் புதிய ஏஐ பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆண்ட்ராய்டு போன்கள்
பல ஆயிரங்களை செலவு செய்து மொபைல் போன் வாங்கினால் அதை திருடர்களிடம் இழப்பதோடு, போனில் உள்ள முக்கிய தகவல்கள் திருடப்படவும் வாய்ப்புள்ளது.
மேலும், வங்கி கணக்குகள் மூலம் பணத்தை திருடவும் வாய்ப்புள்ளது. ஆனால் தற்போது இதை தடுக்கும் வகையில் கூகுள் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கூகுள் AI பாதுகாப்பு
இந்த புதிய அம்சம் மூலம் உங்கள் போன் திருடப்பட்டால் அதை திருடியவர் பயன்படுத்த முடியாதபடி கூகிள் லாக் செய்து விடுகிறது. இதில் திருட்டைக் கண்டறிந்து போனை லாக் செய்வது (Theft Detection Lock), ஆஃப்லைனில் போனை லாக் செய்வது (Offline Device Lock), தொலைதூரத்தில் இருந்தாலும் போனை லாக் செய்வது (Remote Lock) என 3 வழிகளில் கூகிள் இதை செய்கிறது.
Theft Detection Lock அம்சத்தின் படி, யாரோ உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்குவது போன்று சந்தேகமான அசைவுகளை உங்கள் போனில் கண்டறிந்தால் செயற்கை நுண்ணறிவு உங்கள் போனை தானாகவே லாக் செய்து விடும்.
ரிமோட் லாக்
திருடியவர் போனை இணையத்திலிருந்து துண்டிக்க முயற்சிக்கிறார் என்ற சந்தேகம் ஆண்ட்ராய்டுக்கு எழுந்தால், 'ஆஃப்லைனில் போனை லாக் செய்' எனும் பயன்பாட்டின் உதவியுடன் மொபைல் தானாகவே லாக் ஆகிவிடும்.
குறிப்பாக find my device அம்சம் முடக்கப்பட்டிருந்தாலோ Google கணக்கை அணுக முடியாமல் இருந்தால் கூட Remote Lock மூலம் மொபைல் எண்ணை பயன்படுத்தி போனை லாக் செய்யும் வசதி உள்ளது.
இனி போன் திருப்பட்டாலும் அதை பயன்படுத்த முடியாத வகையில் உள்ளதால் ஆண்ட்ராய்டு போன் திருட்டு குறைய வாய்ப்புள்ளது.