இந்தியாவுக்கு உதவ ரூ.135 கோடி வழங்கும் கூகுள் - சுந்தர் பிச்சை அறிவிப்பு

India Corona Google Sundar Pichai
By mohanelango Apr 26, 2021 12:30 PM GMT
Report

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 

இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவ முன்வந்துள்ளன. முக்கியமான ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்கான திட்டங்கள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க ரூ.135 கோடி வழங்குவதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ள அவர், “இந்தியாவில் கொரோனாவின் நிலைமை மோசமாகி வருவதை பார்ப்பதற்கு கவலையாக உள்ளது. எனவே மருத்துவ தேவைகள் மற்றும் பிற உதவிகளுக்கு கூகுள் நிறுவனம் யூனிசெப் மற்றும் கிவ் இந்தியா அமைப்பின் மூலம் வழங்குகிறது” என்றுள்ளார்.