google map-பை நம்பி சென்ற குடும்பம் - நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம்!
கூகுள் மேப்பின் தவறான வழிகாட்டுதலால் கார் ஆற்றில் கவிழ்ந் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
கேரளா
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் மற்றும் அவரது குடும்பத்தினர் காரில் பயணித்துள்ளனர். இரவு நேரத்தில் வழி சொல்ல யாரும் இல்லாததால், கூகுள் மேப் காட்டும் வழியைப் பின்பற்றி அவர் காரை ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திருச்சூர் அருகே வந்தபோது காயத்ரிபுழா ஆற்றின் குறிக்கே இருந்த தடுப்பணையைத் தாண்டி கார் ஆற்றில் கவிழ்ந்தது. இதனை கண்டு அதிர்ச்சியைடந்த அப்பகுதி மக்கள் கார் விபத்துக்குள்ளானதை அறிந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
கூகுள் மேப்
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயனைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு காரில் பயணித்த 5 பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.சமீபத்தில், உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியில் கூகுள் மேப் வழித்துணையுடன் பயணித்த கார்,
கட்டி முடிக்கப்படாத பாலத்தில் இருந்து கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.இந்த நிலையில், திருச்சூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பயணித்த கார் ஆற்றில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.