கூகுள் நிறுவனத்தில் இருந்து 10 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்

Google
By Thahir Nov 22, 2022 11:00 PM GMT
Report

10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய கூகுள் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊழியர்கள் பணி நீக்கம்?

உலக பெரிய நிறுவனங்களான டிவிட்டர், மெட்டா, அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களை வேலையில் இருந்து ஆயிரக்கணக்கில் பணிநீக்கம் செய்து வருகின்றனர்.

அதே போல, கூகுள் நிறுவனமும் தங்கள் நிறுவனத்தில் செயல்பாடு திறன் குறைவாக இருக்கும் வேலையாட்களை கண்காணிக்க கூறி மேலாளர்களிடம் கூறியுள்ளது.

Google has decided to lay off 10,000 employees

அதனை கணக்கில் எடுத்துக்கொண்டு, 10,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தில் ஆட்களை வேலையில் இருந்து நீக்குவதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.