சுமார் 12,000 ஊழியர்களை நீக்கிய கூகுள்... - தற்போது 100 ரோபோ தொழிலாளர்களை நீக்க திட்டம்..!

Google World
By Nandhini Feb 25, 2023 07:00 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

சுமார் 12 ஆயிரம் ஊழியர்களை நீக்கிய கூகுள் நிறுவனம், தற்போது தனது உணவகங்களில் பயன்படுத்தப்படும் 100 ரோபோ தொழிலாளர்களை நீக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

100 ரோபோ தொழிலாளர்களை நீக்க திட்டம்

சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததையடுத்து, கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட், அதன் தலைமையகத்தில் உள்ள உணவகங்களில் சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட்ட 100 ரோபோக்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையால் ஆல்பபெட்டின் ‘எவ்ரிடே ரோபோட்ஸ்’ திட்டம் மூடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் சக்கரங்களில் நகரும் 100 ஒற்றைக் கை ரோபோக்களுக்கு நிறுவனத்தின் உணவு விடுதிகளை சுத்தம் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த ரோபோக்கள் டேபிள்களை சுத்தம் செய்து குப்பைகளை மறுசுழற்சிக்காக பிரித்துள்ளன. கொரோனா தொற்று நோய் பரவலின்போது, இந்த ரோபோக்களின் உதவி பயனுள்ளதாக இருந்தது. இப்போது இந்த ரோபோ பிரிவு மூடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், செலவினங்களைக் குறைப்பதற்காக, கூகுள் பணிக்குத் திரும்பும் ஊழியர்களிடம் கூட அலுவலக இடத்தை அதிகரிக்க 100 ரோபோ தொழிலாளர்களை நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

google-fires-100-robot-workers-cafeterias