மாஸ்க் அணிந்திடுங்கள், உயிரை காத்திடுங்கள்: கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய கூகுள் டூடுல்!
மாஸ்க் அணிந்திடுங்கள், உயிரை காத்திடுங்கள் என கூகுள் டூடுல் மூலமாக கொரோனா விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு குறைந்து வருகிறது. பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் வெளியே வருவது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கமால் இருப்பது போன்றவை சமூகத்தில் அதிகரித்துள்ளது.
இதனால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், மக்களிடையே கொரோனா விழப்புணர்வை ஏற்படுத்த அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கூகுள் நிறுவனம் கொரோனா விழிப்புணர்வை தனது டூடுலில் பதிவு செய்துள்ளது. கொரோனா வைரஸை அகற்ற, மாஸ்க் அணிந்திடுங்கள் என்று கூகுள் டூடுலில் அறிவுறத்தப்பட்டுள்ளது.
மேலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் உங்களையும் உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களையும் பாதுகாக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவுவதைத் தடுக்க
உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யவும், முகமூடி அணியவும் பொதுமக்களுக்கு டூடுல் மூலம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.