உலகையே கையில் அடக்கிய மாமேதையின் அகவை தினம் - கூகுளின் கடவுள் சுந்தர்பிச்சைக்கு குவியும் வாழ்த்துகள்!

உலகமே இன்று செல்போன் மூலம் கையில் அடங்கிவிட்டது என தெரிவிக்கின்றோம்.. அந்த உலகத்தை ஒரு 6 சொல்லிற்குள் அடக்கிய மகா வித்துவானின் அகவை தினம் இன்று..

கடைகோடி தெருவில் பிறந்து இன்று உலகமே வியந்து பார்க்கும் அளவு உயர்ந்த மாமனிதரே சுந்தர் பிச்சை

யார் இந்த சுந்தர் பிச்சை?

தமிழகத்தின் தென் மாவட்டமான மதுரையில் ஜூன் மாதம் 10-ம் தேதி 1972 ஆம் ஆண்டு, ரகுநாத பிச்சை மற்றும் லட்ச்மி தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் தான் பிச்சை சுந்தரராஜன்.தந்தை ரகுநாத பிச்சைக்கு பிரிட்டிஷ் குழு நிறுவனமான் ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனியில் எலெக்ட்ரிக்கல் என்ஜினியராக 3 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பணிபுரிந்து வந்தார். மேலும் மின்சார உற்பத்தி நிறுவனத்தையும் நடத்தி வந்தார். சுந்தர் பிச்சை பிறப்பதற்கு முன்பு வரை, அவரது தாயார் லட்சுமி சுருக்கெழுத்தாளராக (ஸ்டெனோகிராபர்) பணிபுரிந்து வந்தார். சுந்தர் பிச்சைக்கு ஒரு இளைய சகோதரரும் உள்ளார். இவர் பிறந்தது மதுரை மாவட்டம் என்றாலும், வளர்ந்தது என்னவோ மாநகர் சென்னையில் தான்.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சுந்தர் பிச்சைக்கு, அவரது வீட்டில் படிப்பதற்கோ தனி அறை என்று எதுவும் கிடையாது. சுந்தர் பிச்சைக்கு எண்களை நினைவில் வைத்து கொள்ளும் திறன் அதிகம் உள்ளதாக அவர்களது பெற்றோர்கள் கூறுகின்றனர். அவர்கள் வீட்டில் டிவி, தொலைபேசி போன்ற எதுவும் வைத்திருந்ததே இல்லையாம். சுந்தர் பிச்சை தனது உயர்நிலை பள்ளி படிப்பை சென்னை அசோக்நகரில் உள்ள தனியார் பள்ளியில் முடித்துள்ளார். மேலும் அவரது, மேல் நிலை பள்ளிப்படிப்பை சென்னை ஐஐடி வனவானி பள்ளியிலும் முடித்துள்ளார்.

கிரிக்கெட் மற்றும் புட்பால் மீது ஆர்வம் கொண்ட சுந்தர் பிச்சை பள்ளியில் உள்ள கிரிக்கெட் அணிக்கு தலைவராக இருந்திருக்கிறார். கிரிக்கெட் தவிர்த்து புத்தகம் படிப்பதில் தான் சுந்தர் பிச்சைக்கு மிகுந்த ஆர்வம். என்னதான் நண்பர்களே இல்லாமல் புத்தகமே படித்தாலும், இதுவரை எந்த பாடங்களிலும் முதலிடம் வகித்ததில்லை என கூறப்படுகிறது. தனது தந்தை மின்பொறியாளர் பணியை பற்றி அடிக்கடி சுந்தர் பிச்சையிடம் பேசியதால், தொழில்நுட்பங்கள் மீது சுந்தர்பிச்சைக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.தனது மேல்நிலை பள்ளி படிப்பை முடித்த சுந்தர் பிச்சை, கோரக்பூர் ஐஐடி கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர்ந்து பயின்றுள்ளார்.

கல்லூரியில் தொடங்கிய காதல்.. கண்கள் மூடும் வரை..!

பள்ளியில் சக மாணவியை கூட திரும்பி பார்க்காத சுந்தர் பிச்சைக்கு கல்லூரியில் தான் காதல் மலர்ந்துள்ளது. தனது சக வகுப்பு மாணவியான அஞ்சலியும், சுந்தர் பிச்சையும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். இந்த நட்பு சில நாட்களில் காதலாக மலர்ந்துள்ளது. கல்லூரியின் இறுதியாண்டில் அஞ்சலியிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் சுந்தர்பிச்சை. அவரது காதலுக்கு அஞ்சலி க்ரீன் சிக்னல் கொடுத்த நிலையில் இருவரும் 1993 ஆம் ஆண்டு இளங்கலை படிப்பை முடித்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வெள்ளிப்பதக்கத்தோடு தனது இளங்கலை பட்டம் பெற்ற சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனரான லேரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் படித்த அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஊக்கத்தொகையோடு முதுகலை படிப்பு பயில வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் பிறகு குவாடான் ஸ்கூல் ஆப் பிஸ்னஸில் எம்.பி.ஏ.படிப்பை முடித்துள்ளார்.

ஏதோ ஒரு வேலை வேண்டும்..!

கல்லூரி படிப்புகளை முடித்து ஏதோ ஒரு வேலை வேண்டும் என்ற எண்ணத்தில் தவித்து கொண்டிருந்த சுந்தர் பிச்சைக்கு, மெகின்சே அண்ட் கம்பேனியின் தயாரிப்பு மேலாளர் மற்றும் நிர்வாக ஆலோசகராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. தனக்கென நிரந்தரமாக ஒரு வேலை கிடைத்தவுடன் அஞ்சலியின் பெற்றோரிடம் பேசி, சம்மதம் வாங்கிய பின், அவரை திருமணம் செய்துகொண்டார் சுந்தர் பிச்சை.

இதனை தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு போட்டியிட்டுள்ளார். ஆனால், அந்த பதவி இந்தியரான சத்யா நாதெல்லா என்பவருக்கு கிடைத்தது. இதையடுத்தே கூகுளின் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இணைய வளர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலமது. எதிர்வரவிருக்கும் காலங்களில் இணையமே உலகின் இயங்கியலைத் தீர்மானிக்கக்கூடிய காரணியாக இருக்கும் என்பதை உணர்ந்த பல நிறுவனங்கள் இத்துறைக்குள் கால் பதிக்கத் தங்களைத் தயார்படுத்திக்கொண்டிருந்தன. ஏற்கனவே இருந்த இத்துறைசார் நிறுவனங்கள், தங்களது வேர்களை ஆழப்பதிப்பதற்கான முயற்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்தன.

சாதனைகள் புரிய காலடி வைத்த தளம்.

லேரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் ஆகியோரால் தொடங்கப்பட்டு ஆறு வயதே எட்டிய 'கூகிள்' என்ற நிறுவனத்தில், அந்தக் காலகட்டத்தில் நம் மதுரையைச் சேர்ந்த ஒரு தமிழர் பணிக்குச் சேர்கிறார். அப்போதைய காலக்கட்டத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது இண்டெர்நெட் எக்ஸ்ப்லோரரும், மொசிலா ஃபையர் ஃபாக்ஸும் தான்.

இந்த தேடல்களில் கூகுள் டூல் பாரை உருவாக்கும் பணியில் நியமிக்கப்பட்டார் சுந்தர் பிச்சை. இதனை தொடர்ந்து கூகுள் டூல் பார் வெளியாகி மெல்ல மெல்ல பயனர்களை அடைந்து அதிக பயனாளர்கள் பயன்படுத்தும் டூல் பாராக உருவெடுத்தது. இதையடுத்து 2002ஆம் செப்டம்பர் மாதம் 2-ம் தேதி மேடையில் கூகுள் குறித்து பேசியுள்ளார்.

கூகுள் குரோம் வெளியான பின்பு அவற்றின் வேகமாக செயல்பாடு, மிக விரைவான தேடல் என அனைத்தும் பயனர்களை எளிதில் அடைந்து நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் செல்போன்களில் கூகுள் டூல் பார் இருக்கும் படியே செல்போன்கள் உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்தே 2012-ம் ஆண்டு சிறந்த ப்ரௌசர் என்ற பெயரை பெற்றதோடு அதிக மக்கள் பயன்படுத்தும் ப்ரௌசர் என்ற பெயரும் பெற்றது.

ஆண்ட்ராய்டுகளை கைக்குள் அடக்க தொடங்கிய போது..!

2013ஆம் ஆண்டு ஆண்ட்ராய்டு சுந்தர் பிச்சையின் கீழ் வந்ததும் மகத்தான சாதனையை நிகழ்த்தி காட்டினார் சுந்தர் பிச்சை. இதையடுத்து 2015ஆம் ஆண்டு ஆல்பபெட் நிறுவனம் தொடங்கப்பட்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார். அன்று முதல் இன்று வரை மிகச்சிறப்பாக வழி நடத்தி கொண்டிருக்கிறார் சுந்தர் பிச்சை.

உலகையே ஒற்றை கையில் அடக்கி சாதனை..!

அவருக்கு அனைத்து எழுத்துக்களும் இந்த 6 எழுத்துக்களுக்குள் அடங்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. அதன்படி, அவரும் கனவும் நினைவாகி, தற்போது நம் அனைவருக்கும் என்ன வேண்டுமென்றாலும் கூகுளை தட்டி கேட்கும் படி கூகுளை உயர்த்தியுள்ளார்.

கடைகோடி தெருவில் பிறந்து இன்று, சாதனையின் உச்சி விளம்பின் உயரத்தில் நிற்கும் இவர் இருக்கும்வரை இந்திய நாடு விரைவில் வல்லரசாக மாறும் என நம்பிக்கையோடு உரைக்கலாம்.. அப்துல் கலாமின் கனவை நினைவாக்க இவர் போன்ற சாதனையாளர்களாக தான் முடியும்..

இவரது பிறந்தநாள் சில இணையதளங்களில் ஜூலை 12 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.. இவரது பிறந்த நாளான இன்று, ட்விட்டரில் #sundarpichai என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது..

https://twitter.com/search?q=%23SundarPichai&src=typeahead_click

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்