கல்லூரி பேருந்து மீது ரயில் மோதி விபத்து - 20 மாணவர்கள் காயம்

Accident Karur
By Karthikraja Mar 14, 2026 02:33 PM GMT
Report

கரூரில் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 20 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

கல்லூரி பேருந்து மீது மோதிய ரயில்

கரூர் மாவட்டம் வெள்ளியணையில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை தனியார் கல்லூரி பேருந்து ஒன்று இன்று மாலை கடந்து சென்றுள்ளது.

அப்போது எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் சிக்கியுள்ளது. அதே நேரத்தில் புலியூரில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு ஜல்லி ஏற்றி வந்த சரக்கு ரயில் ஒன்று தண்டவாளத்தில் வந்துள்ளது. 

கல்லூரி பேருந்து மீது ரயில் மோதி விபத்து - 20 மாணவர்கள் காயம் | Goods Train Hit College Bus Karur Students Injured

இதனை கண்டு அச்சமடைந்த மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்க முயற்சித்துள்ளனர். அதற்குள் ரயில் பேருந்தின் மீது மோதியுள்ளது.

இதில் 20 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.