உங்களிடம் வீட்டில் இதெல்லாம் இருந்தால் ரேசன் பொருட்கள் நிறுத்தப்படலாம் - உஷார் மக்களே..!

Tamil nadu Government Of India
By Thahir Mar 05, 2023 06:54 AM GMT
Report
180 Shares

உங்களிடம் வீட்டில் இதெல்லாம் இருந்தால் இலவச ரேசன் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படும்.

இலவச ரேசன் பொருட்கள் 

இந்த செய்தி தொகுப்பில் எந்தெந்த ரேசன் அட்டைகளுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்படுகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரேசன் அட்டைகளை அரசு வழங்கி வருகிறது. மேலும் உங்களிடம் ரேசன் அட்டை இருந்தால் நீங்கள் கட்டாயம் இதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

Goods may be withheld for ration card holders

கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா நோய் தொற்றின் போது ரேசன் அட்டை உள்ள ஏழைகளுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.

இந்த திட்டத்தை 2023 ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த திட்டத்திற்காக அரசாங்கம் பல லட்சம் கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.

இதெல்லாம் இருக்க கூடாது 

இந்த திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களுக்கு ரேசன் கார்டு வழங்குவதும், மேலும் மலிவு விலையில் ரேசன் பொருட்கள் வழங்குவதும் தான்.

கொரோனா தொற்றில் இருந்து மக்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இலவச ரேசன் பொருட்களை பெற்று வந்தால் நீங்கள் செய்யும் தவறுகளால் சிக்கலில் மாட்டிக் கொள்ள கூடும்.

நீங்கள் நோட் செய்ய வேண்டியது என்னவென்னறால் உங்களிடம் 4 வீலர் வண்டி இருக்கக்கூடாது. அப்படி நீங்கள் 4 வீலர் வைத்திருந்தால் இலவச ரேசன் பொருட்கள் உங்களுக்கு வழங்கப்படாது.

இரண்டாவதாக, உங்களிடம் 100 சதுர மீட்டர் வீடு அல்லது உங்கள் வருமானத்திலிருந்து சம்பாதித்திருந்தால், நீங்கள் இலவச ரேஷனைப் பயன்படுத்த முடியாது.

மூன்றாவதாக, நீங்கள் கிராமத்தில் வசிக்கிறீர்கள் மற்றும் உங்கள் வருமானம் ஆண்டுதோறும் 2 லட்சம் ரூபாய் இருந்தால் உங்களால் இலவச ரேஷன் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியாது.

நகரத்தைப் பொறுத்தவரை, ஆண்டு வருமானம் ரூ .3 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கக்கூடாது. அதேபோல் கிராமத்தில் ஒரு டிராக்டரின் சொத்தக்காரர் மற்றும் ஆயுத உரிமம் கொண்டவர்களும் இலவச ரேஷனுக்கு தகுதியற்றவர்கள் ஆவார்கள்.  

You May Like This Video