பிரிவோம் நதிகளே.. மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம் : ஆப்கன் பெண்ணின் மனதை உருக்கும் பதிவு

Afghan Roya Heydari Heartbreaking Post
By Irumporai Aug 27, 2021 12:26 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளரும் புகைப்படப் பத்திரிகையாளருமான பெண் ஒருவர் தாய்நாட்டிலிருந்து வெளியேறியது குறித்து பதிவிட்ட ட்வீட் மனதை உருக்குவதாக உள்ளது. ஆப்கானிஸ்தான் தற்போது மீண்டும் தலிபான்களின் அதிகாரத்திற்கு வந்துள்ளது.

இதனால் பெண்களுக்கு முழு சுதந்திரமும் பறிக்கப்படும் என்று கருதி ஏராளமான பெண்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளரும் புகைப்படப் பத்திரிகையாளருமான ரோயா ஹெய்தாரி என்பவர் தாய்நாட்டிலிருந்து வெளியேறியது குறித்து பதிவிட்ட ட்வீட்டும் புகைப்படமும் மனதை உருக்குவதாக உள்ளது.

தனது தாய் நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி தனது ட்விட்டர் பதிவில் நான் என் முழு வாழ்க்கையையும் விட்டுவிட்டு, தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக என் வீட்டை விட்டு வெளியேறினேன். மீண்டும், நான் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கப் போகிறேன். என் கேமராக்கள் மற்றும் உயிரற்ற ஆன்மாவை மட்டும் எடுத்துக்கொண்டு செல்கிறேன். கனத்த இதயத்துடன், தாய் நாட்டிலிருந்து விடைபெறுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார் ரோயா ஹெய்தாரி.