தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைந்தால் பல நல்ல திட்டங்கள் கொண்டுவரப்படும் - அமைச்சர் வி.கே.சிங் பேட்டி
தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இன்னும் பல திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றார் மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் அதிமுக கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக தோல்வி வெங்கடேசன் போட்டுவிடுகிறார்.
அதற்கான தேர்தல் பணி குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது கூட்டத்துக்குப் பின் பேட்டி அளித்த அவர் நாங்கள் தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். இக்கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும். மக்களுக்கான திட்டங்கள், கொள்கைகள் குறித்து மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பிரசாரம் செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் தேசிய அளவில் தமிழ்நாடு பல்வேறு வகைகளிலும் முதலிடத்தில் உள்ளது. கொரோனா பிரச்னைகளையும் எதிர்கொண்டு வணிகம், உள்கட்டமைப்பு உள்பட அனைத்து வகைகளிலும் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.
தமிழ்நாடு வளர்ச்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக மத்திய அரசுக் கடந்த 6 ஆண்டுகளில் ரூ. 6.50 லட்சம் கோடி வழங்கியுள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ. 1.50 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீன் வளம் மேம்பாடு, மீனவர் நலனுக்காக ரூ. 25,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இதுபோல, பல்வேறு வகைகளிலும் அதிமுக அரசுடன் இணைந்து மத்திய அரசுப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. எனவே, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இன்னும் பல திட்டங்கள் நிறைவேற்றப்படும் என மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். வருங்காலங்களில் நிலுவையிலுள்ள பல திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
தமிழகத்தில் எங்களது ஆட்சி மீண்டும் அமைக்கப்படும் திருவையாறு புறவழிச்சாலை உள்பட மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
தஞ்சாவூர் நாகை தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரதமர் மட்டுமல்லாமல், அமித்ஷா, ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் உள்பட அனைத்து தலைவர்களும் தமிழ்நாட்டுக்கு பிரசாரம் செய்வதற்காக வரவுள்ளனர்.