அழகான போட்டோவை நிர்வாண போட்டோவாக மாத்தி - வாலிபர் செய்த கொடுமை
ஒரு வாலிபர் சமூக ஊடகத்தில் தன்னை பெண்ணாக காமித்து பல பெண்களை ஏமாற்றி அவர்களின் படங்களை மார்பிங் செய்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்த பாரத் அஹிர் என்ற வாலிபர் பல்வேறு சமூக ஊடக தளங்களில் தன்னை ஒரு பெண்ணாக அறிமுகப்படுத்திகொண்டு, பல பெண்களுக்கு வலை விரித்துள்ளார்.
இதில் சிக்கிய அந்த பெண்களை, தன்னுடை போலி அடையாளத்தை பயன்படுத்தி அவர்களிடம் நட்பு கொண்டார். அவர்களும் பாரத்தை பெண் என்று நினைத்து அவர்களின் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொண்டு உள்ளனர்.
பின்னர் அந்த பெண்களின் அழகான புகைப்படங்களை எடுத்து அதை நிர்வாணமாக மாற்றி மார்பிங் செய்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அது ஒரு ஆண் என்பதை கண்டுபிடித்து கைது செய்தனர்.