இனி அபராதம் கிடையாது மக்களே : குட் நியூஸ் சொன்ன அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனா காலத்தில் பணிபுரிந்த அனைத்து செவிலியர்களுக்கும் விரைவில் படிப்படியாக அரசுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் பணிபுரிய ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர்.பின்னர் அவர்களது பணிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது
தற்போது ,தமிழகத்தில் கொரோனா காலத்தில் பணிபுரியும் செவிலியர்களில் 1000 பேருக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டுள்ளது.சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து,மீதமுள்ள செவிலியர்கள் தங்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
[
இந்நிலையில்,கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த மேலும் 800 செவிலியர்களுக்கு விரைவில் அரசுப் பணி வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
அதே சமயம்,பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மினி கிளினிக் மருத்துவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விரைவில் மாற்றுப்பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும்,சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்:
தடுப்பூசி கட்டாயமல்ல என்று கூறப்பட்டுள்ளதே தவிர,அதை மக்கள் போட கூடாது என்று கூறவில்லை.எனவே,மக்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக,இனி முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட மாட்டாது.எனினும்,அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.