தங்கம் விலையில் அதிரடி சரிவு! மீண்டும் ஒரு லட்சத்திற்குக் கீழ் சவரன்
Good News for Gold Buyers - Prices Drop Significantly : இன்றைய (நவம்பர் 17) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக, நவம்பர் மாத தொடக்கத்திலிருந்து தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் தங்கத்தின் விலை, இன்று மீண்டும் அதிரடியாகக் குறைந்துள்ளது.

கடந்த ஐந்து நாட்களாகத் தங்கத்தின் விலை தொடர்ச்சியாகச் சரிந்து வரும் நிலையில், இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி முதன்முறையாக ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாயை எட்டியிருந்தது.
அதன் பின்னர் படிப்படியாக உயர்ந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயையும் கடந்தது. இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள விலைச் சரிவு நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்
இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து 12,470 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 99,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் தங்கம் கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 10,205 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 81,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை
[93TTY7 ]
வெள்ளியின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி 190 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து சரிவைக் கண்டு வரும் தங்கத்தின் விலை மேலும் குறையுமா அல்லது மீண்டும் உயரத் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு நகைப்பிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்துசமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி அச்சுறுத்தல் குறித்து வெளியான அறிவிப்பு IBC Tamil
பதவி உயர்வின் போது ஆசிரியர்களுக்கு ஏற்படும் சம்பள பிரச்சனை: எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை IBC Tamil