வாகன சாரதிகளுக்கு குட் நியூஸ் - பெட்ரோல், டீசல் விலை குறைகிறது
வாகன ஓட்டிகள் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையுமா என எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை
அடுத்த நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.
பல தொழில் முறை சார்ந்தவர்கள் பட்ஜெட்டில் தங்களுக்கு சாதகமாக முக்கிய அறிவிப்பு வருமா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறையுமா என்ற வாகன ஓட்டிகளில் எதிர்பார்ப்பு அதிகம்.
பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இது வரை நேரடியாக விலை குறைப்பு உறுதி செய்யவில்லை.
ஆனால் எண்ணெய் விலை மற்றும் வரிகளை அரசு கவனித்து வருகிறது என்றும், தொழில்துறை அமைப்பான CII நீண்டகாலமாக கலால் வரியை குறைக்க பரிந்துரைத்து வருகிறது என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் 2026 பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலைகளில் குறைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றர்.
முக்கியமாக வாகன ஓட்டிகள். கலால் வரி குறைப்பு பொதுமக்களுக்கு நிவாரணம் அளித்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.
இதற்கு பின்னார் 3 காரணங்கள் இருக்கின்றது. கச்சா எண்ணெய் விலை கட்டுப்பாட்டில் உள்ளது, அரசு வருவாய் நல்ல நிலையில் உள்ளது, மற்றும் CII பரிந்துரைகள். கலால் வரி குறைப்பு செலவினத்தை குறைத்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்தி, நுகர்வை அதிகரிக்கும்.