“வாங்குன அடியே போதும்...நாளைக்கு பாருங்க என்ன நடக்கும்ன்னு” - ஜோ ரூட்டின் புது திட்டம்
இந்தியாவுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து பாடம் கற்றுக்கொண்டதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி டிராவில் முடிய, 2வது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனிடையே 3வது போட்டி நாளை ஆகஸ்ட் 25 ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியையும் வெல்லும் முனைப்புடன் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் நல்ல பாடம் கற்றுக்கொண்டதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் கூறியுள்ளார்.
மேலும் அந்த போட்டியில் சில விஷயங்களை கொஞ்சம் வித்தியாசமாக செய்திருக்க வேண்டும் என நினைப்பதாகவும், இன்னும் மூன்று ஆட்டங்கள் எஞ்சியுள்ளதால் நாங்கள் கம்பேக் கொடுப்போம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.