சிறப்பான ஆட்சியினை கொடுக்கிறார் நம் முதல்வர்: முதல்வரை புகழ்ந்த ஓ.பி எஸ்
முதல்வராக பதவி வகித்து வரும் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்தி வருவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை விராலிமலை வட்டம், குன்னத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பின்னர் பேசிய துணை முதல்வர், முதல்வராக பதவி வகித்து வரும் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகிறார் என கூறியுள்ளார்.
மேலும், ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் முதல்வராக பழனிசாமி இந்த ஆட்சியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என்றும் நதிகளை இணைக்க வேண்டும் என்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.