புனித வெள்ளி : தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

church goodfriday
By Irumporai Apr 15, 2022 05:25 AM GMT
Report

இன்று பெரிய வெள்ளி எனப்படும் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.

ஏசுவை கொல்கொதா மலைக்கு இழுத்து சென்று அங்கு சிலுவையில் அவரை ஆணிகளால் அடித்தும், தலையில் முள் கிரீடம் சூட்டியும் பிதாவின் சித்தத்தின்படி உயிரை மாய்க்கும் முன் 7 வார்த்தைகளை சிலுவையில் ஏசு கூறுவார்.

அந்த 7 வார்த்தைகள் பற்றி ஆலயங்களில் போதனை நடைபெறும். உயிரை விடுவதற்கு முன்பாக சிலுவையில் ரத்தம் சிந்தியவாறு அவர் கூறும் வார்த்தைகள் பற்றி இன்று சிறப்பு வழிபாடாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆராதனை 3 மணி நேரம் தியாணிக்க கூடிய வகையில் நடைபெறுவதால் இதற்கு மும்மணி தியான ஆராதனை என்று கிறிஸ்தவர்கள் கூறுவார்கள்.

கத்தோலிக்க திருச்சபைகளிலும், தென்னிந்திய திருச்சபைகளிலும், லுத்தரன், மெத்தடிஸ்ட், பெந்தே கோஸ்து உள்ளிட்ட பல்வேறு பிரிவு கிறிஸ்தவ அமைப்புகளிலும் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.

அந்த நாளில் உபவாசம் இருந்து வழிபாடுகளில் பலர் பங்கேற்பார்கள். அதனை தொடர்ந்து பெரிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்த திருநாள் கொண்டாடப்படுகிறது.

இன்று புனித வெள்ளி தினத்தையொட்டி சென்னை சாந்தோம், பெரம்பூர், பெசன்ட்நகர், எழும்பூர் கதிட்ரல், ராயப்பேட்டை வெஸ்லி உள்ளிட்ட ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

சாந்தோம், பெசன்ட்நகர், எழும்பூர், பெரம்பூர் உள்ளிட்ட ஆலயங்களில் சிறப்பு ஆராதனைகளும், சிலுவை பாதையும் நடைபெற்றது.

இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்து 3ம் நாள் உயிர்தெழுவதை ஈஸ்டர் தினமாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 17ஆம் தேதியன்று ஞாயிறு கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.