ஊரடங்கிற்கு நல்ல பலன் .. டெல்லியில் கொரோனா குறைகிறதா?

டெல்லியில் கடந்த மாதம் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் அங்கு கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் கடந்த மாதம் 21-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளதுஇதனால் பொதுமக்கள் மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து வெகுவாகக் குறைந்தது.

கடந்த மாதம் 20-ம் தேதி டெல்லியில் கொரோனா பாதிப்பு 26 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்தது, 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஆபத்தான கட்டத்தை நோக்கி டெல்லி நகர்கிறது, டெல்லியின் சுகாதார அமைப்பு முறையே சீர்குலையும் நிலையில் இருப்பதாகத் தெரிவித்த முதல்வர் கெஜ்ரிவால் தீவிரமான ஊரடங்கை அமல்படுத்தினார்.

இந்த நிலையில் ஊரடங்கிற்கு நல்ல பலன் உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அளித்தப் பேட்டியில்:

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவில் 6,500 பேர் பாதிக்கப்பட்டனர், பாதிப்பு சதவீதம் 11 ஆகக் குறைந்துள்ளது. என கூறியுள்ளார்.

  கொரோனாவில் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்றுவருவோருக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டால் ஆக்சிஜன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

லாக்டவுனை தீவிரப்படுத்தி, மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் பாதிப்பு மேலும் குறையும், தொற்றை நிறுத்திவிடலாம்' எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே டெல்லியில் அமல்படுத்தப்பட்ட தீவிரமான ஊரடங்கும், மக்கள் அளித்த ஒத்துழைப்பும்தான் கொரோனா பரவல் குறைய காரணம் என்று டெல்லி ராஜீவ்காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநர் பி.எல். ஷெர்வால் கூறியுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்