இது மிகவும் நல்ல முடிவு ..சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தஅமைச்சர் ஷைலஜா
கேரள அமைச்சரவையில் புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது மிகவும் நல்ல முடிவு என அமைச்சரவையில் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஷைலஜா தெரிவித்துள்ளார்
. முதல்வராக இரண்டாவது முறையாக பினராயி விஜயன் பதவியேற்க உள்ள நிலையில் அவரது அமைச்சரவையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவுக்கு இடமில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறியுள்ளது.
கேரளத்தில் நிபா வைரஸ் மற்றும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்பட்ட கே.கே.சைலஜா அமைச்சரவையில் இடம்பெறாதது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஷைலஜாவுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படாததற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் முடிவை அவர் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், "புதிய அமைச்சரவை வருவது நல்லது. அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். " எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் எல்லோரும் கடுமையாக உழைத்தனர். ஆனால் நான் மட்டுமே தொடர வேண்டும் என்று கூறுவது அர்த்தமற்றது.
என்னைப் போன்ற இன்னும் பலர் இருக்கிறார்கள். அவர்களாலும் கடினமாக உழைக்க முடியும். இது மிகவும் நல்ல முடிவு" என வரவேற்றுள்ளார்.
.
இதன்மூலம் அமைச்சரவை தொடர்பான சர்ச்சைக்கு முன்னாள் அமைச்சர் ஷைலஜா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.