என்ன மூஞ்சி இது.. இப்படி இருக்கிறதுனாலதான் யாரும் கூப்டறதில்ல - கலங்கிய கோலிசோடா பிரபலம்!

Tamil Cinema
By Sumathi Mar 31, 2023 02:30 PM GMT
Report

படவாய்ப்பு கிடைக்காதது குறித்து கோலி சோடா பல நடிகை சீதா பகிர்ந்துள்ளார்.

நடிகை சீதா 

2014ல் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான படம் கோலி சோடா. இதில் பசங்க படத்தில் நடித்த பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது. இதில் ஒரு பகுதியாக நடித்தவர் தான் நடிகை சீதா.

என்ன மூஞ்சி இது.. இப்படி இருக்கிறதுனாலதான் யாரும் கூப்டறதில்ல - கலங்கிய கோலிசோடா பிரபலம்! | Goli Soda Seetha Opens Up Her Cinema Part

இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “நான் அழகாக இல்லாத காரணத்தினால் எனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. படத்தின் நடிப்பதற்கு முன்னர் என்னுடைய சொந்தமே உன்னை யாரவது நடிக்க கூப்பிடுவார்களா? உன்னுடைய உன்னை யார் நடிக்க கூப்பிடுவார்கள் என்று கூறினார்கள்.

அனுபவம்

நான் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது என்னுடைய அண்ணன் உறவினர்களுக்கு சொன்னார். ஆனால் அவர்கள் இந்த பொண்ணு போய் நடிக்க போகுதா? அதனுடைய மூஞ்சி எப்படி இருக்கிறது என்று கேட்டார்கள். அதோடு என்னுடைய நண்பர்களே கேட்டார்கள் உன்னயெல்லாம் எப்படி படத்தில் நடிக்க அழைத்தார்கள் என்று.

என்ன மூஞ்சி இது.. இப்படி இருக்கிறதுனாலதான் யாரும் கூப்டறதில்ல - கலங்கிய கோலிசோடா பிரபலம்! | Goli Soda Seetha Opens Up Her Cinema Part

ஆனால் படம் வெளியான பிறகு நான் படத்தில் நடித்தினால் அதிகம் அலட்டிக்கொள்கிறேன் நான் தவறாக கூறினார்கள். பலர் நினைக்கின்றனர் சினிமாவில் இருப்பவர்கள் அதிகமாக சம்பாதிப்பார்கள் என்று. ஆனால் அவர்கள் நினைப்பது தவறு சினிமாவை பொறுத்தவரையில் ஒரு நாள் சம்பளம் போன்றுதான்.

நான் BE படித்துக் கொண்டிருப்பதினால் நடிக்க நேரம் ஒதுக்குவது மிகவும் கடினமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் என்னுடைய அம்மாவை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியமாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.