நடிகர் பார்த்திபனுக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்

Actor United Arab Emirates Radhakrishnan Parthiban Golden visa
By Thahir Dec 24, 2021 08:49 AM GMT
Report

நடிகரும் இயக்குநருமான ஆர். பார்த்திபனுக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கெளரவப்படுத்தியுள்ளது.  

ஐக்கிய அரபு அமீரகம் 10 வருடம் செல்லத்தக்க கோல்டன் விசாவை தொழிலதிபர்கள், முதலிட்டாளார்கள், பிரபலங்கள், விஞ்ஞானிகள், திறமைமிக்க மாணவர்கள் ஆகியோருக்கு வழங்கி வருகிறது.

அந்த வரிசையில் தற்போது நடிகரும் இயக்குநருமான ஆர். பார்த்திபனுக்கும் கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கெளரவப்படுத்தியுள்ளது. 

முன்னதாக, பிரபல நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பாடகி சித்ரா, நடிகை த்ரிஷா ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது.

இது மட்டுமன்றி பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், சஞ்சய் தத், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உட்பட பல பிரபலங்கள் இந்த கோல்டன் விசாவை ஏற்கனவே பெற்றிருந்த நிலையில் தற்போது நடிகர் பார்த்திபனுக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த வகையிலான பிரேத்யக விசா ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தங்களது நாட்டை விட்டு திறமைமிக்க சாதனையாளர்கள் சென்றுவிடக் கூடாது என்பதே இந்த விசாவின் நோக்கம்.

இந்த விசாவை 30,000 திர்ஹாமுக்கு மேல் சம்பளம் வாங்குபவர்களும் பெற முடியும். இந்த விசாவை பெறுவதற்கு வயது வரம்பு இல்லை. மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 34 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.