10 ஆண்டுக்கான ‘கோல்டன் விசா’ - நடிகர் விஜய்சேதுபதிக்கு வழங்கி கவுரவித்த துபாய் - குவியும் வாழ்த்துக்கள்
தமிழ் சினிமாத்துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய்சேதுபதி. இவர் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் மனதில் இடம்பிடித்தார். ஹீரோவா இல்லாமல் பல குணச்சித்திர நடிகராகவும் அசத்தி வருகிறார்.
விஜய்சேதுபதி 2 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் 3 விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றிருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதிக்கு ‘கோல்டன் விசா’ வழங்கி ஐக்கிய அரவு அமீரகம் கவுரவப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடிகர் பார்த்திபன், நடிகை அமலா பால் உள்ளிட்ட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கவுவித்துள்ளது.
இந்த ‘கோல்டன் விசா’ என்பது, நீண்ட கால குடியிருப்பு விசா முறையாகும். இது ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை இந்த விசா மூலம் நாம் துபாய்க்கு சென்று வரலாம். மேலும், இந்த விசாவை தானாகவே புதுப்பித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.
பல துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள், தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அரிய திறன்களைக் கொண்டவர்களுக்கு இந்த ‘கோல்டன் விசா’வை வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜய்சேதுபதியின் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.