பொற் கோவிலுக்குள் மர்ப நபர்.. பக்தர்கள் மீது கொடூர தாக்குதல் - நடந்தது என்ன?
பொற் கோவிலுக்குள் மர்ப நபர் நுழைந்து பக்தர்களை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பஞ்சாப்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் புகழ் பெற்ற சீக்கியர்களின் புனித தலமாக உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருவது வழக்கம்.
இந்நிலையில் இந்த கோவிலில் கடந்த மார்ச் 14 தொடங்கி மார்ச் 16 வரை ஹோலா மொஹாலா எனப்படும் சீக்கியர்களின் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.புத்தாண்டை முன்னிட்டு நேற்று வழிப்பாடு செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் தங்கக்கோவிலுக்கு வந்திருந்தனர்.
அப்போது திடீரென மர்ப நபர் ஒருவர் இரும்பு கம்பியுடன் கோவிலுக்குள் நுழைந்து குரு ராம்தாஸ் சாராய் வளாக கட்டடத்தின் இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளார்.அப்போது அவரை தடுக்க முயன்ற கோவில் ஊழியரை கம்பியால் தாக்கியுள்ளார்.
பொற் கோவில்
தொடர்ந்து பக்தர்களையும் தாக்கியுள்ளார். பின்னர் பக்தர்களும் ஊழியர்களும் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று பக்தர்கள் மற்றும் இரண்டு ஊழியர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்தினர். இதில் ஆகிய இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது . இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரனையில் தாக்குதல் நடத்தியவர் அரியானாவை சேர்ந்த சுல்பான் என்பது தெரியவந்துள்ளது.