உலகின் உயரிய விருதை தட்டிய RRR படம் - பாராட்டு மழையில் படக்குழு
ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.
நாட்டு நாட்டு
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'. இந்த படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.
இந்த படத்தில் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். மேலும், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கோல்டன் குளோப்
இந்நிலையில், இத்திரைப்படம் கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் இடம்பிடித்தது. ஒரிஜினல் பாடல் பிரிவில் எம்.எம்.கீரவாணி இசையமைத்த 'நாட்டு நாட்டு' பாடலுக்கு விருது கிடைத்துள்ளது.
மேலும் ஆஸ்கார் விருது நாமினேஷனிலும் இப்பாடல் இடம்பிடித்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் இயக்குனர் ராஜமவுலி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு விருதினை பெற்றனர்.