மழைநீர் வடிகால் அமைக்க தோண்டப்பட்ட குழி - 10 அடி ஆழத்தில் இருந்த தங்க புதையல்!

Kerala India
By Jiyath Jul 14, 2024 07:22 AM GMT
Report

மழைநீர் வடிகால் அமைக்க தோண்டப்பட்ட குழிக்குள் தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

புதையல் 

கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள செங்காலா பகுதியில் தனியார் ரப்பர் தோட்டம் உள்ளது. அங்கு மழைநீர் வடிகால் அமைக்க தொழிலாளர்கள் குழி தோண்டினர். 10 அடி ஆழத்திற்கு குழி தோண்டியபோது, மண்ணுக்குள் குடம் ஒன்று புதைந்திருந்தது.

மழைநீர் வடிகால் அமைக்க தோண்டப்பட்ட குழி - 10 அடி ஆழத்தில் இருந்த தங்க புதையல்! | Gold Treasure Found In Garden Kerala

அதை வெளியே எடுத்த தொழிலாளர்கள் வெடிகுண்டாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் கண்ணூர் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் குடத்தை திறந்து பார்த்தபோது புதையல் இருந்துள்ளது.

6 மாதங்களுக்கு முன் இறந்த அதிகாரிக்கு இடமாற்ற உத்தரவு - அதிர்ச்சியில் ஊழியர்கள்!

6 மாதங்களுக்கு முன் இறந்த அதிகாரிக்கு இடமாற்ற உத்தரவு - அதிர்ச்சியில் ஊழியர்கள்!

தொல்லியல் துறை 

அதில், 17 முத்துமணிகள், 13 தங்க பதக்கங்கள், 4 காசுமணி மாலைகள், 2 கம்மல்கள், மற்றும் வெள்ளி நாணயங்கள் இருந்தன. இதையடுத்து, அந்த பொருட்களை மீட்ட போலீசார், வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மழைநீர் வடிகால் அமைக்க தோண்டப்பட்ட குழி - 10 அடி ஆழத்தில் இருந்த தங்க புதையல்! | Gold Treasure Found In Garden Kerala

பின்னர், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் தளிப்பரம்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்த தொல்லியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.