கொரோனா சிகிச்சைக்கு சென்றவர் வீட்டில் நகை கொள்ளை - திருடர்கள் கைவரிசை
கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனையில் இருந்த ஆசிரியரின் வீட்டை 14 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பாப்பான்குளம் உமா நகரில் பெம்மசானி அவன்யூல் வசிப்பவர் பெட்ரிக் ஞானசேகரன். இவர் காஞ்சிபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் தலைமையாசிரியராக பணிப்புரிந்து வருகின்றார். இவரது மனைவி ஹேனா பெட்ரிக் அரக்கோணத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
ஆசிரியை ஹேனா பெட்ரிக் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பெட்ரிக் ஞானசேகரன் அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்து இவரும் சென்னையிலேயே தங்கியள்ளார்.
சுமார் பதினைந்து நாட்கள் கழித்து இன்று காலை அரக்கோணம் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவை திறந்து அதிலிருந்த 14 சவரன் தங்க நகைகள் திருடு போனது தெரிய வந்தது.
வீட்டின் மற்றொரு இடத்தில் வைத்திருந்த சமார் 60 சவரன் தங்க நகைகள் தப்பியதாக காவல் துறையினர் தெரிவித்தனர். பெட்ரிக் ஞானசேகரன் கொடுத்த புகாரின் பேரில் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் முலம் கைரேகைகளை பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.