பிரதமர் மோடிக்கு தங்கத்தில் சிலை - 156 கிராமத்தில் உருவாக்கம்

Narendra Modi Gujarat
By Thahir Jan 21, 2023 07:36 AM GMT
Report

குஜராத்தில் பிரதமர் மோடிக்கு தங்கத்தில் சிலை தயாரிக்கப்பட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

156 கிராம் எடையுள்ள தங்க சிலை

கடந்த மாதம் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில், மொத்தம் 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை கைப்பற்றி பாஜக கட்சி அமோக வெற்றி பெற்றது.

இதை குறிக்கும்வகையில் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஒரு நகை தயாரிப்பு நிறுவனம், 18 காரட் தங்கத்தில் 156 கிராம் எடையுள்ள பிரதமர் மோடியின் மார்பளவு சிலையை உருவாக்கி உள்ளது.

Gold statue of Prime Minister Modi

பிரதமர் மோடியின் இந்த தங்க சிலை கடந்த மாதமே தயாராகி விட்டது. ஆனால், எடை 156 கிராமுக்கு மேல் இருந்ததால் சில மாறுதல்கள் செய்து எடையை 156 கிராமாக குறைத்து.

பாஜக 156 தொகுதிகளில் வெற்றி பெற்றதை குறிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த சிலை உருவாக்க சுமார் 20 பொற்கொல்லர்கள் சேர்ந்து 3 மாதங்களாக பாடுபட்டு இந்த சிலையை செய்தனர்.

மக்களிடையே பெரும் வரவேற்பு

இந்த தங்க சிலையை செய்வதற்கு சுமார் ரூ.11 லட்சம் மதிப்புள்ள தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சிலை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால்.

இதனை விலைக்கு வாங்க பலர் ஆர்வமாக உள்ளனர். இருப்பினும், விற்பது குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் வசந்த் போரா இன்னும் முடிவு செய்யவில்லை.

மேலும் இவர் ஏற்கனவே குஜராத்தில் உள்ள பிரமாண்டமான படேல் சிலையின் மாதிரி வடிவத்தை தங்கத்தில் தயாரித்து விற்பனை செய்துள்ளார்.