எமா்ஜென்சி விளக்கிள் மறைத்து வைத்து தங்க கடத்தல்..ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுங்கத்துறை

gold lamp smuggling
By Irumporai May 17, 2021 03:39 PM GMT
Report

சாா்ஜாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் எமா்ஜென்சி விளக்கிற்குள் மறைத்து வைத்து கடத்திவந்த ரூ.1.18 கோடி மதிப்புடைய 2.39 கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்தனர் .

சாா்ஜாவிலிருந்து இன்று அதிகாலை சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்த சிறப்பு ஏா் அரேபியா விமானத்தில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து விமானநிலைய சுங்கத்துறையினா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

அப்போது ஏா் அரேபியா விமானத்தில் கா்நாடகா மாநிலம் மங்களூரை சோ்ந்த பயணி முகமது அராபத்(24) என்பவா் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அப்போது அவர் கொண்டு வந்திருந்தஎமா்ஜென்சி விளக்கு மீது சந்தேகம் ஏற்பட்டது.

எமா்ஜென்சி விளக்கிள் மறைத்து வைத்து தங்க கடத்தல்..ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுங்கத்துறை | Gold Smuggling Emergency Lamp Sketched Customs

அதனை சோதனை செய்த போது .பின்பகுதியில் 18 தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.

அதன் மொத்த எடை 2.39 கிலோ.சா்வதேச மதிப்பு ரூ.1.18 கோடி என தெரிய வந்துள்ளது.

எமா்ஜென்சி விளக்கிள் மறைத்து வைத்து தங்க கடத்தல்..ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுங்கத்துறை | Gold Smuggling Emergency Lamp Sketched Customs

இதையடுத்து ,முகமது அராபத்தை சுங்கத்துறையினா் கைது செய்து மேலும் விசாரணை நடத்தியதில் .இவா் சா்வதேச தங்கம் கடத்தும் கும்பலை சோ்ந்தவா் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.