புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை - முதல்முறை சவரன் ரூ. 46,000-க்கு விற்பனை!
தங்கம் விலை முதல் முறையாக ரூ.46,000த்தை எட்டியுள்ளது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.
ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை தற்போது முதல்முறையாக ரூ.46,000த்தை எட்டியுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 அதிகரித்து 5,750 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.46,000 ஆக விற்பனையாகிறது.
புதிய உச்சம்
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.36 அதிகரித்து 4710 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.288 அதிகரித்து ரூ.37,680 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 1 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82.80 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.82,800 எனவும் விற்பனையாகிறது.